அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க, மீன்பிடிக்க தடை 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க, மீன்பிடிக்க தடை 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் நீர் திறக்கப்படுவதால் கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது. இதேபோல், குண்டேரிபள்ளம் அணை உபரிநீர் ஓடையிலும் மக்கள் இறங்க, குளிக்க, மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவிரி எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 8,500 கனஅடியில் இருந்து 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் நீர்வரத்து ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP