கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்க தடை

ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு பொதுப்பணித்துறை தடைவிதித்துள்ளது.
 | 

கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்க தடை

ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு பொதுப்பணித்துறை தடைவிதித்துள்ளது. கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து தடுப்பணை அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோபிசெட்டிபாளையம் அருகே மழைவெள்ளம் வயல்களில் புகுந்ததில் 1000 ஏக்கர் பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. கனமழையால் தடப்பள்ளி பாசன வாய்க்காலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் சாகுபடி வயல்களில் நீர் புகுந்து, 1000 ஏக்கரில் இருந்த நெல், வாழை, கரும்பு பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். பிரசித்திபெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலிலும் மழை வெள்ள நீர் புகுந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP