Logo

பாமக-வின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது: ராமதாஸ்

வேலூர் மாவட்டத்தில் மூன்றாக பிரித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
 | 

பாமக-வின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது: ராமதாஸ்

வேலூர் மாவட்டத்தில் மூன்றாக பிரித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நகரங்களை தலைநகரங்களாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். பாமகவின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றும், வேலூர் மாவட்ட மக்களின் உணர்வுகளை மதித்தும் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் இது போதுமானதல்ல. மாறாக, தமிழகத்தின் நிலப்பரப்பை நிர்வாக ரீதியாக சீரமைப்பதற்கு இது ஒரு நல்லத் தொடக்கமாகும். நான் மீண்டும், மீண்டும் கூறிவருவதைப் போல தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 12 லட்சம் பேர் இருக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களையும் மறுவரையறை செய்வது தான் சிறந்த நடவடிக்கையாக இருக்கும். தமிழகத்தில் மக்கள்தொகை அடிப்படையில் மாவட்டங்களைப் பிரிக்க தனி ஆணையத்தை அமைக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP