குழந்தை விற்பனை விவகாரம்: 7 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

குழந்தை விற்பனை விவகாரத்தில், நர்ஸ் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரின் ஜாமீன்மனுக்களை நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் மீண்டும் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
 | 

ராசிபுரத்தில் பிறந்த குழந்தைகளை லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்பனை செய்த விவகாரத்தில், ராசிபுரத்தைச் சேர்ந்த நர்ஸ் அமுதா மற்றும் அவரது கணவரும், நகராட்சி ஊழியராகவும் பணிபுரியும் ரவிச்சந்திரன் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வழக்கில் கைதான அமுதா, ரவிச்சந்திரன், பர்வீன் ஹசீனா, நிஷா, அருள்சாமி உள்ளிட்ட 7 பேர் ஜாமீன் கேட்டு, நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், அனைவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர்களது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது இது இரண்டாவது முறையாகும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP