மீண்டும் தலைத்தூக்கும் ஸ்டெர்லைட் விவகாரம்! ஆலையை செயல்பட அனுமதிக்கலாம்.. 

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த நிலையில், இன்று இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

மீண்டும் தலைத்தூக்கும் ஸ்டெர்லைட் விவகாரம்! ஆலையை செயல்பட அனுமதிக்கலாம்.. 

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த நிலையில், இன்று இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இறுதித்தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22ம் தேதி நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனால் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தியதில் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்து அதை செயல்படுத்தி விட்டது.

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் செய்த மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் நிர்வாக பணிகளை மேற்கொள்ள மட்டும் ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்து, ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது. இந்தக்குழு ஆய்வு செய்து அறிக்கையும் சமர்பித்துவிட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மற்றும் சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை தனித்தனியாக மூடி முத்திரையிடப்பட்ட 48 உறைகளில் வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று இந்த உத்தரவில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி தருண் அகர்வால் தாக்கல் செய்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடியது நீதிக்கு எதிரானது எனவும் தருண் அகர்வால் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்தது. தருண் அகர்வால் தாக்கல் செய்த அறிக்கையால் தமிழக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட வாய்ப்பில்லை என்றும், மீண்டும் ஸ்டெர்லைட்  தலைத்தூக்க வாய்ப்பிருப்பதும் தெரியவந்துள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP