மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்!

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் எழுந்தருளிய அத்திவரதர் இன்று மாலை மீண்டும் குளத்திற்குள் செல்கிறார்.
 | 

மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்!

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் எழுந்தருளிய அத்திவரதர் இன்று மாலை மீண்டும் குளத்திற்குள் செல்கிறார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி தொடங்கி கோலகலமாக நடைபெற்றது.  நீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து 48 நாள்களுக்குப் பக்தர்களுக்கு அருள்புரிவதால், பெருமாளை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 

கடந்த 47 நாட்கள் நடைபெற்ற அத்திவரதர் தரிசனத்தில் சுமார் ஒரு கோடியே 7,500 பேர் தரிசனம் செய்துள்ளனர். 48வது நாளான இன்று அத்திவரதருக்கு ஆகம முறைப்படி சடங்குகள் நடத்தப்பட்டு இன்று மாலை அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் எழுந்தருளுகிறார். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பொன்னையன் கூறுகையில், " இன்று மாலை காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலின் மூலவரை தரிசித்த பின்னர் அத்திவரதர் குளத்தில் வைக்கப்படுவார். குளத்தை சுற்றி 2 மாதங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மேலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்துப்பட்டு கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

தரிசனத்திற்காக வைக்கப்பட்ட தடுப்புகள் மற்றும் சாலை சீரமைப்பு போன்றவை 15 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும், கோவில் உண்டியலில் ரூ.7 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தரிசன நாட்களில் தினசரி 25 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை மறுசுழற்சி செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP