ரயில் பெட்டியில் பிறந்த குழந்தை!

எழும்பூர் ரயில் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த ரயிலின் பெட்டியில் ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீசார் உதவியால் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்ததுள்ளது. தற்போது அந்த குழந்தையும், பெண்ணும் நலமுடன் உள்ளனர்.
 | 

ரயில் பெட்டியில் பிறந்த குழந்தை!

எழும்பூர் ரயில் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த ரயிலின் பெட்டியில் ரயில்வே பாதுகாப்பு படை  பெண் போலீசார் உதவியால் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்ததுள்ளது. தற்போது அந்த குழந்தையும், அந்த பெண்ணும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அகமதாபாத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் விரைவு ரயில் ஹவுரா எக்ஸ்பிரஸ். இந்த ரயில் நேற்று எழும்பூர் ரயில் நிலையம் வந்தது. அந்த ரயிலின் ஏசி பெட்டியில் நெல்லையைச் சேர்ந்த சுவர்ணலதா (26) என்பவர் தனது கணவர் இசக்கியுடன் பயணம் செய்து வந்தார். சுவர்ணலதா நிறை மாத கர்ப்பமாக இருந்தார். ரயில் எழும்பூர் ரயில் நிலையம் வந்தபோது சுவர்ணலதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்ட்டுள்ளது. உடனே அவரது கணவர் இசக்கி ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப்படை பெண் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனை ஆம்புலன்ஸ், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்த மருத்துவ உதவியாளர்கள் சுவர்ணலதாவிற்கு சிகிச்சை அளிக்க ஓடி வந்தனர். உடனே ரயில் பெட்டியில் இருந்த பயணிகளை வெளியே அனுப்பிவிட்டு மருத்துவ உதவியாளர்கள் சுவர்ணலாதாவுக்கு பிரசவம் பார்த்தனர். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறகு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரயில்வே ஊழியர்கள், மருத்துவ உதவியாளர்கள் உதவியுடன் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP