அயோத்தி நிலப்பிரச்னை: வக்பு வாரியத்திற்காக வாதாடும் வழக்கறிஞருக்கு பேராசிரியர் சாபம்..

அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கில் சன்னி வக்பு வாரியத்திற்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு சென்னையை சேர்ந்த பேராசிரியர் சண்முகம் சாபமிட்டு கடிதம் எழுதியுள்ளார்.
 | 

அயோத்தி நிலப்பிரச்னை: வக்பு வாரியத்திற்காக வாதாடும் வழக்கறிஞருக்கு பேராசிரியர் சாபம்..

அயோத்தி நிலப்பிரச்னை தொடர்பான வழக்கில் சன்னி வக்பு வாரியத்திற்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு சென்னையை சேர்ந்த என்.பேராசிரியர் சண்முகம் சாபமிட்டு கடிதம் எழுதியுள்ளார். 

அயோத்தி நிலப்பிரச்னை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் ஹிந்து தரப்பு வாதம் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து இஸ்லாம் தரப்பில் வழக்கறிஞர் ராஜீவ் தவான் (88) வாதம் உள்ளது. ஏற்கனவே அலகாபாத் நீதிமன்றத்தில் அயோத்தி நிலம் 3 ஆக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி இந்து தரப்பினருக்கும், மற்றொரு பகுதி ஷியா தரப்பினருக்கும் மீதமுள்ள பகுதி சன்னி வக்பு வாரியத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த பேராசிரியர் சண்முகம் சன்னி வக்பு வாரியத்திற்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு சபாமிட்டு ஒரு கடிதம் எழுத்தியுள்ளார். அந்த கடிதத்தில், ராம ஜென்ம பூமியானது 10வது நூற்றாண்டில் இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இருந்தது எனவும்,  தவான் ஒரு இந்துவாக இருந்து கொண்டு ஹிந்து விரோதியாக செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும்,1941 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 50 லட்சம் தடவை காயத்திரி மந்திரம் ஜெபித்திருக்கிறேன். பகவத் கீதை 10ஆவது அத்தியாயத்தை 1958 முதல் இன்று வரை 27,000 முறை வாசித்திருக்கிறேன். உன்னை சபிக்கிறேன்: உன் நாக்கு பேசுவதை நிறுத்தும், உன் கால்கள் விளங்காமல் போகும், உன் கண்கள் பார்வை இழக்கும், உன் காதுகள் செவிடாகும். உங்கள் குடும்பம் அழிந்துவிடும் என சாபமிட்டுள்ளார். 

இது தொடர்பாக ராஜீவ் தவான்  உச்ச நீதிமன்றத்தில் பேராசிரியர் சண்முகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மனு தாக்கல் செய்துள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP