வியக்க வைக்கும் கீழடி!

சிவகங்கை கீழடி அகழ்வாராய்ச்சியில் நகர நாகரீகத்தின் வடிகால் அமைப்பு குறித்து தமிழக தொல்லியல் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 | 

வியக்க வைக்கும் கீழடி!

சிவகங்கை கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட நகர நாகரீகத்தின் வடிகால் அமைப்பு குறித்து தமிழக தொல்லியல் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் நடைபெற்ற ஐந்தாம் கட்ட அகழாய்வு பணி குறித்த அறிக்கையை தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நகர நாகரீகத்தின் ஒன்றான வடிகால் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாவும், இதுவரை கண்டறியாத  வேறுபட்ட 3 வகையான வடிகால் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுருள் வடிவிலான சுடுமண் குழாய், பீப்பாய் வடிவிலான 3 சுடுமண் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டுள்ளதோடு, பீப்பாய் குழாயின் கீழ் அடுக்கில் வடிகட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2 அடுக்கு பீப்பாய் குழாய் வழியாக திரவங்கள் அல்லது நீர் சென்றிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP