ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை! - உச்ச நீதிமன்றம் அதிரடி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
 | 

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை! - உச்ச நீதிமன்றம் அதிரடி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.  

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையம் விசாரிப்பதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில், ஆறுமுகசாமி ஆணையை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக, தமிழக அரசு சாராத 21 மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவை விசாரணைக்காக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 

மேலும், அப்போலோ தரப்பு மருத்துவர்களை அடிக்கடி விசாரணைக்கு வரச்சொல்லி வற்புத்துகின்றனர் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி, அப்பல்லோ தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

தொடர்ந்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்ததுடன், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.  

மேலும், மருத்துவர்கள் அடங்கிய விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்ற அப்போலோவின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP