விஜய் சேதுபதி போன்ற கலைஞர்கள் யோசித்து பேச வேண்டும்: அமைச்சர் பாண்டியராஜன்

நடிகர் விஜய் சேதுபதி போன்ற கலைஞர்கள் காஷ்மீர் விவகார பிண்ணனியை சரியாக புரிந்து கொண்டு பேச வேண்டும் என தமிழ்வளர்ச்சிதுறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ் வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த விஜய்சேதுபதி,  ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து திரும்பபெறப்பட்டது ஜனநாயகத்துக்கு விரேதமானது என்றும் காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே கருத்து கூறிவிட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நடிகர் விஜய்சேதுபதி ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான விவகாரத்தில் பின்புலத்தை சரியாக புரிந்து கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் ஆழ்ந்து யோசித்து பேச வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP