தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி மலர வேண்டும்- அர்ஜூன் சம்பத்

தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியை அகற்றிவிட்டு ஆன்மிக ஆட்சி மலரவேண்டும் என தருமபுரியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 | 

தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி மலர வேண்டும்- அர்ஜூன் சம்பத்

தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியை அகற்றிவிட்டு ஆன்மிக ஆட்சி மலரவேண்டும் என தருமபுரியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், “மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி மலர வேண்டும், தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியை அகற்றிவிட்டு ஆன்மிக ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் பிரசார இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆன்மிக அரசியலை முன்னெடுக்கும் நடிகர் ரஜியனிகாந்த் முதல்வராக வர வேண்டும். அதிமுக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் போலியான ஆன்மிகத்தை கொண்டுள்ளனர்.

அண்மைக்காலமாக உச்சநீதிமன்றம் அளித்து வரும் தீர்ப்புகள் கவலை கொள்ளச் செய்கின்றன. ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்றும், தகாத உறவு குற்றமல்ல என்றும் வெளியாகும் தீர்ப்புகள் பாரதப் பண்பாட்டைச் சீர்குலைக்கும். எனவே, உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என நாட்டின் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை விடுக்கிறேன். சீதை, கண்ணகி பிறந்த பாரத மண்ணில் அரசியல் சாசனத்தின் படியான சுதந்திரம் என்ற பெயரில் கலாசார சீரழிவை அனுமதிக்க முடியாது. இலங்கையில் தமிழ் ஈழம் மலரத் தடையாக இருப்பதே தமிழ்நாட்டிலுள்ள திராவிடக் கட்சிகள் தான். எனவே, அவர்கள் இதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். தமிழ் ஈழத்தை இந்திய நாட்டால் மட்டும்தான் உருவாக்க முடியும். இந்து இயக்கங்களை சேர்ந்த தலைவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருகின்றன. இதனைக் கண்டித்து வரும் அக். 4 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை இந்து மக்கள் கட்சி சென்னையில் ஏற்பாடு செய்துள்ளது” என கூறினார். 

Newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP