வேளாண், தோட்டக்கலை பட்டயப்படிப்புக்கு 29ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

2019-20-ம் ஆண்டுக்கான வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்பிற்கு 29ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 | 

வேளாண், தோட்டக்கலை பட்டயப்படிப்புக்கு 29ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

 2019-20-ம் ஆண்டுக்கான வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்பிற்கு 29ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்புகள் உள்ளன. வேளாண் பட்டயப்படிப்பிற்கு உறுப்பு கல்லூரிகளில் 290 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 460 இடங்களும் உள்ளன. தோட்டக்கலை பட்டயப்படிப்பிற்கு உறுப்புக்கல்லூரியில் 40 இடங்களும், இணைப்புக் கல்லூரியில் 70 இடங்களும் உள்ளன.

2 ஆண்டு காலம் கொண்ட இந்த பட்டயப்படிப்புகளில் சேருவதற்கு பன்னிரெண்டாம் வகுப்பில், இயற்பியல், வேதியியல் பாடங்களுடன், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிற்கல்வி பிரிவில், உயிரியல் மற்றும் வேளாண் செயல்முறை பாடங்களைப் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேளாண் கல்வி நிலையம், வம்பனில் மட்டும் தமிழ் வழி கற்பித்தல் முறையும், மற்ற அனைத்து வேளாண் கல்வி நிலையங்களில் ஆங்கிலம் வழி கற்றல் முறையும் பின்பற்றப்படும். மேற்கூறிய பட்டயப்படிப்புகளுக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.tnau.ac.in/admission.html) உள்ள விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலமாக பூர்த்தி செய்து, பின்பு பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை விண்ணப்பக் கட்டணம் ரூ.200 (எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 100 மட்டும்) (demand draft) உடன் சான்றிதழ்கள் இணைத்து – முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 641-003 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

இணையதள மூலம் விண்ணப்பம் பெறும் நாள் : வரும் 29-ம் தேதி முதல் ஜுன் 28 

பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தபால் மூலம் சமர்ப்பிக்க கடைசிநாள் : மாலை 5 மணி, ஜுலை 03 

தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நாள் : ஜுலை 10 

மேலும் விபரங்களுக்கு 0422 – 6611345 , 6611346 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ, ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP