இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியரான அன்பு ரூபி!

உழைப்பும், விடாமுயற்சியுமே ஒரு மனிதனுக்கு வெற்றியை கொடுக்கும்.. அதற்கு பாலினம் தடையில்லை.. என்பதை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அன்பு ரூபி என்ற திருநங்கை நிரூபித்து காட்டியுள்ளார்.
 | 

தூத்துக்குடி மாவட்டம், சேர்வைகாரன் மடத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளியான ரத்ன பாண்டி - தேன்மொழி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் அன்பு ராஜ். இவர் காலப்போக்கில் தான் பெண் என்பதை உணர 
ஆம்பித்துள்ளார். இதனால் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டார். ஆனால், அவரது தாய் தேன் மொழி அன்பு ராஜ்க்கு உறுதுணையாக இருந்தார். இதனால் மற்றவர்களை கண்டு ஒதுங்கி நிற்காமல்  விடாமுயற்சியுடன் நெல்லையில் உள்ள நர்சிங் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார் அன்பு ரூபி. தற்போது இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவரின் முயற்சி மற்றும் உழைப்பை பாராட்டும் விதத்தில் தமிழக அரசு அவரது சொந்த ஊரிலேயே அவருக்கு செவிலியர் பணி வழங்கி கௌரவித்துள்ளது. 

இது குறித்து அவரது தாய் தேன்மொழி கூறுகையில்,  மாற்றுப்பாலினத்தவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. மகன் மகளாக மாறியதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP