அனல் காற்று வீசும்; உள்மாவட்டங்களில் மழை! - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 | 

அனல் காற்று வீசும்; உள்மாவட்டங்களில் மழை! - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம்(கத்தரி வெயில்) ஆரம்பித்துள்ளதை அடுத்து, பெரும்பாலாக அனைத்துப்பகுதிகளிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோடை வெயிலின் தாக்கத்தினால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். 

இதையடுத்து, இன்னும் 2 தினங்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், "தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது உள்நோக்கி வரும் பட்சத்தில், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்யலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP