குழந்தையை கடத்தியதாக அமுதா மீது புகார்!

குழந்தைகள் விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள செவிலியர் அமுதா மீது, ராஜகுமாரி என்பவர், அவரின் குழந்தையை கடத்தியதாக ராசிபுரம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.
 | 

சேத்தியாதோப்பை சேர்ந்த ராஜகுமாரி என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு, ஜெயங்கொண்டத்தில் பிறந்த 2 நாட்களே ஆன தன்னுடைய ஆண் குழந்தை காணாமல் போனதாகவும், குழந்தை காணாமல் போனதற்கும், அமுதாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி  ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

குழந்தைகள் விற்பனை தொடர்பாக செவிலியர் அமுதா, அவரது கணவர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்பட 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP