அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை!

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற சத்துணவு பணியாளர்களுக்கான வயது வரம்பு 45ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 | 

அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை!

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற சத்துணவு பணியாளர்களுக்கான வயது வரம்பு 45ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 50% மானிய விலையில் இருசக்கர வாகன வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, இத்திட்டத்தின் கீழ், இந்த நிதியாண்டில், இருசக்கர வாகனங்களை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி முதல் கொடுக்கப்பட்டு வந்தது. இருசக்கர வாகனத்தை பெறுவதற்கான வயது வரம்பு 18இல் இருந்து 40க்குள் இருக்க வேண்டும்.

இந்த நிலையில்,  இந்த வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்று சத்துணவு பணியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற சத்துணவு பணியாளர்களுக்கான வயது வரம்பு 40இல் இருந்து 45ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP