Logo

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் பின்வாங்க போவதில்லை.. அமித்ஷா திட்டவட்டம்..

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்தது முதற்கொண்டு, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து சட்டமாக இயற்றப்பட்டுள்ள நிலையில், அசாம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்தன.
 | 

இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் போராட்டம் நடத்துவதை தடுப்பதற்காக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. மேலும், பாஜக சார்பில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவின் உண்மை நிலவரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஜோத்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சிகள் ஓரணியில் வந்தாலும் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் ஒரு அங்குலம் கூட பின்வாங்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள் எவ்வளவு தவறான தகவல்களை பரப்ப முடியுமோ அவ்வளவு தவறான தகவல்களை பரப்பி கொள்ளுங்கள் எனவும் அமித்ஷா கூறியுள்ளார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP