அதிர வைத்த வீடியோ! ரம்யா கிருஷ்ணன் காட்டும் அதிரடி!

ஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்! அதிர வைத்த வீடியோ!
 | 

அதிர வைத்த வீடியோ! ரம்யா கிருஷ்ணன் காட்டும் அதிரடி!

தமிழ் திரையுலகில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் பல இயக்குநர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக எடுத்து வருகிறார்கள். ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக இயக்குவதற்கு தடை கோரிய வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கையில், ஏ.எல்.விஜய், கங்கனாவை வைத்து ‘தலைவி’ என்கிற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. ஜெயலலிதாவுக்கும், கங்கனாவுக்கும் துளியும் சம்பந்தமேயில்லை என்று பரவலான கருத்துக்கள் வெளியானது.                                          

                                                     

இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணனை வைத்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் குயில் வெப் சிரீஸ் ட்ரைலரை இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த ட்ரைலரில் ஜெயலலிதாவாகவே பல காட்சிகளில் ரம்யா கிருஷ்ணன் அதகளப்படுத்தியிருக்கிறார் என்று ட்விட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP