அதிர வைத்த ஜியோ ஆஃபர்!! 30 நாளில் 91 மில்லியன் வாடிக்கையாளர்கள்!

ஜியோ நிறுவனம் 30 நாளில் 91 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றதாக டிராய் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
 | 

அதிர வைத்த ஜியோ ஆஃபர்!! 30 நாளில் 91 மில்லியன் வாடிக்கையாளர்கள்!

ஜியோ நிறுவனம் 30 நாளில் 91 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றதாக டிராய் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் கடந்த அக்டோபர் மாதம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டண சலுகைகள் மாற்றப்பட்டன. கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால், அந்தந்த நிறுவனங்களின் பயனாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாயினர்.

அதிர வைத்த ஜியோ ஆஃபர்!! 30 நாளில் 91 மில்லியன் வாடிக்கையாளர்கள்!

இந்நிலையில் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 2019 அக்டோபர் மாத நிலவரப்படி , இந்தியாவில் செல்போன் மற்றும் லேண்டுலைன் இணைப்புகளின் எண்ணிக்கை 120.48 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் மாதத்தில் நகர்ப்புறங்களில் செல்போன் இணைப்புகள் 68.16 கோடியாகவும், கிராமங்களில் 52.31 கோடியாகவும் உயர்ந்து இருக்கிறது.

இதில், ஜியோ நிறுவனம் கிட்டத்தட்ட 90 லட்சம் இணைப்புகளை பெற்று முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்சமயம் 36.43 கோடி பேர் ஜியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP