அற்புதம் நிகழும், அதிசயம்  நிகழும் என்று சொல்வதை ரசிக்கின்றனர்.. ஏற்றுக்கொள்ளவில்லை: தமிமுன் அன்சாரி

தமிழக அரசியலில் அற்புதம் நிகழும், அதிசயம் நிகழும் என்று சொல்வதை மக்கள் ரசிக்கின்றனர். ஆனால் ஏற்றுக்கொள்ளவில்லை என மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
 | 

அற்புதம் நிகழும், அதிசயம்  நிகழும் என்று சொல்வதை ரசிக்கின்றனர்.. ஏற்றுக்கொள்ளவில்லை: தமிமுன் அன்சாரி

தமிழக அரசியலில் அற்புதம் நிகழும், அதிசயம்  நிகழும் என்று சொல்வதை மக்கள் ரசிக்கின்றனர். ஆனால் ஏற்றுக்கொள்ளவில்லை என மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, காவல் துறையில் தமிழ்மொழியில் தகவல்  தொடர்புகள் இருக்கும் என்ற டி.ஜி.பி திரிபாதியின் உத்தரவு வரவேற்கதக்கது. மகாராஷ்டிரா அரசியலில் நடந்த சூழல் ஜனநாயகத்திற்கு  மிக பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இப்போது நல்ல  சூழல் திரும்பியுள்ளது. மகாராஷ்டிராவில் நடைபெற்ற
பெருந்தவறுக்கு துணை போன ஆளுநர் மீது மத்திய அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும். மராட்டிய ஆளுநரை திரும்ப பெற  வேண்டும். மத்திய அரசு ஆளுநர்களை கொண்டு  இரட்டை நிர்வாகத்தை மேற்கொள்ள முயற்சிக்க கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியில் செய்வதை போல மராட்டியத்தில் ஆளுநர் செய்கின்றார். இது ஜனநாயக படுகொலை என்றும், இது போன்ற ஆளுநர்களை திரும்ப பெறும் போது பிறமாநில ஆளுநர்கள் இந்த தவறை செய்ய மாட்டார்கள் எனத் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரை மேயர், நகராட்சி தலைவர்கள் பொறுப்புகளை நேரடியாக தேர்வு செய்வதுதான் சரியாக இருக்கும் என கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக, கோடம்பாக்கத்தில் உறங்கி கொண்டு இருந்த சிலரை தூண்டிவிட்டு வடமாநிலத்தை சேர்ந்த சக்திகள் சொல்ல வைக்கின்றனர். கோடம்பாக்கத்தில்  இருந்து அரசியல் அதிகாரத்திற்கு வர விரும்புகின்றனர். அது தவறில்லை. ஆனால் வெற்றிடம் இருப்பதாக தவறான தகவலை பரப்பி கொண்டு வருகின்றனர். ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தமிழக அரசியலில் வெற்றிடத்தை நிரப்பி விட்டார்கள். அடுத்த  20 ஆண்டுகளுக்கு திராவிட கட்சிகள்தான்  தமிழகத்தில் ஆட்சி செய்யும். அற்புதம் நிகழும், அதிசயம்  நிகழும் என்று சொல்வதை மக்கள் ரசிக்கின்றனர். ஆனால் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், ஆடிட்டர் குருமூர்தியின் அதிமுக குறித்த விமர்சனங்கள் கவலையளிப்பதாகவும், இதற்கு  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தான் பதில் அளிக்க வேண்டும் எனக்கூறிய அவர், ஜெயலலிதா இருந்திருந்தால் அதிமுக மீது இது போன்ற விமர்சனங்களை வைத்திருக்க முடியாது என கூறினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP