பாஜகவுடனான கூட்டணி பயத்தால் உருவான கூட்டணி: சஞ்சய்தத்

பாஜகவுடனான கூட்டணி, மத்தியில் ஆளும் அரசு அமலாக்க துறை சார்பில் நடவடிக்கை எடுத்து விடும் என்ற பயத்தின் காரணமாக அமைந்த கூட்டணி என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார்.
 | 

பாஜகவுடனான கூட்டணி பயத்தால் உருவான கூட்டணி: சஞ்சய்தத்

பாஜகவுடனான கூட்டணி பயத்தின் காரணமான கூட்டணி என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தலுக்கான  மண்டல ஆயத்த கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய சஞ்சய்தத், நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய தேர்தல் எனவும், 4 ஆண்டுகளாக நடைபெற்ற மோசமான ஆட்சிக்கு பொதுமக்கள் மதிப்பெண் வழங்கும் தேர்தல் எனவும் கூறினார். 

 அதிமுக மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததோடு, கவர்னரிடமும் புகார் மனு அளித்த பாமக தற்போது, அதே கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளதாகவும், பாஜகவுடனான இந்த கூட்டணி, மத்தியில் ஆளும் அரசு அமலாக்க துறை சார்பில் நடவடிக்கை எடுத்து விடும் என்ற பயத்தின் காரணமாக அமைந்த கூட்டணி எனவும் குறிப்பிட்ட அவர், அவர்களின் ஒரே கொள்ளை ஊழல் ஒன்றே என தெரிவித்தார். 

மேலும், கஜா புயல் பாதிக்கப்பட்டபோது பிரதமராக இருந்த மோடி தமிழகத்திற்கு வரவில்லை என்பதையும் சுட்டிகாட்டி கடுமையாக விமர்சித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP