Logo

சிலைகள் அனைத்தும் திருடப்பட்டவை தான்: அடித்துக்கூறும் பொன் மாணிக்கவேல்!

தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் திருடப்பட்டவை, பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் கோவிலில் வழிபாடு செய்ய வைக்கப்பட்டிருந்த சிலைகளாகும் என சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
 | 

சிலைகள் அனைத்தும் திருடப்பட்டவை தான்: அடித்துக்கூறும் பொன் மாணிக்கவேல்!

தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் திருடப்பட்டவை என  சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். 

சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தியதில் 60 கோவில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தும் தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களைச் சேர்ந்த தொன்மையான சிலைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகள் அனைத்தும் தற்போது லாரி மூலமாக கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. 

இதுதொடர்பாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "விற்பனை உரிமம் இல்லாதவர்களிடம் ரன்வீர் ஷா சிலைகளை வாங்கி உள்ளார். சிலைக்கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீனதயாளன், ரன்வீர் ஷாவிடம் சிலைகள் விற்றதாக கூறியதையடுத்து, இங்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. ரன்வீர் ஷா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் கோவிலில் வழிபாடு செய்ய வைக்கப்பட்டிருந்த சிலைகளாகும். கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் தொன்மையானவை. சிலைகளை வைக்க அரசு அருங்காட்சியகத்தில் இடம் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட 75% சிலைகளை தீனதயாளன் தான் ரன்வீர் ஷாவிடம் விற்றிருக்கிறார். மேலும் அவையனைத்தும் திருடப்பட்ட சிலைகள் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்" எனவும் தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP