அட்சய திருதி : நகைக்கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

அட்சய திருதி தினத்தை முன்னிட்டு தங்கம் வாங்க, நகைக்கடைகளில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர். அட்சய திருதி நாளில் தங்கம் உள்ளிட்ட பொருள்களை வாங்கினால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
 | 

அட்சய திருதி : நகைக்கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

அட்சய திருதி தினத்தை முன்னிட்டு தங்கம் வாங்க, நகைக்கடைகளில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்.

அட்சய திருதி நாளில் தங்கம் உள்ளிட்ட பொருள்களை வாங்கினால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்த ஆண்டுக்கான அட்சய திருதி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள நகைக்கடைகளில் இன்று அதிகாலை முதலே வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடைகளுக்கு வந்து ஆர்வமுடன் பொன்நகைகளை வாங்கி்க் கொண்டு, புன்னகையுடன் வீடு திரும்பி வருகின்றனர். இன்று தங்க நகைகள் வாங்க, கடந்த ஆண்டைவிட 40 சதவீதம் பேர் அதிகமாக முன்பதிவு செய்துள்ளதாக, தங்க -வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  

தங்க நகைகள் வாங்க வசதியில்லாத ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அரிசி, உப்பு போன்ற பொருள்களை வாங்கி  ஆறுதல் அடைகின்றனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP