அஜித் ரொம்ப நேர்மையானவர், நல்லவர் - தமிழிசை பாராட்டு

நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததை தொடர்ந்து, அஜித் மிகவும் நல்லவர் என்றும் நேர்மையானவர் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை பாராட்டியுள்ளார்.
 | 

அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, சூப்பர்ஸ்டாரின் பேட்ட படத்தின் வசூலை விஸ்வாசம் மிஞ்சியுள்ளதாக சமூக வலைத்தளங்களில், அஜித் ரசிகர்கள் பெருமிதம் கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் அஜித் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை "சினிமா கலைஞர்களிலேயே மிகவும் நேர்மையானவர் அஜித் தான். அவர் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப்போலவே அஜித் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால்தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்" என்று கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP