வாகனங்கள், தொழிற்சாலை புகையால் சென்னையில் காற்று மாசு: வானிலை மையம்

சென்னையில் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் புகையால் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

வாகனங்கள், தொழிற்சாலை புகையால் சென்னையில் காற்று மாசு: வானிலை மையம்

சென்னையில் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் புகையால் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், " வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தெற்கு உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லோசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, தேனி, சேலம், மதுரை, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ய்புபள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். காலை நேர பனி, வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகையால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. 

புல் புல் புயல் தற்போது அதிதீவிர புயலாக மத்திய மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் வடக்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP