2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்: விஜயபாஸ்கர்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவனை 2 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்படும் என்று ஆய்வுக்கு பின் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 | 

2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்: விஜயபாஸ்கர்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவனை 2 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்படும் என்று ஆய்வுக்கு பின் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் முதல்முறையாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நேரில் ஆய்வு செய்தார். எய்ம்ஸ் கட்டிடத்தின் வரைபடத்தைக்  கொண்டு நிலத்தை அவர் ஆய்வு செய்தார். சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ஆய்வின்போது உடனிருந்தனர்.

அப்போது மருத்துவமனை குறித்த திட்ட அறிக்கையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் வீரராகவ ராவ் ஆகியோர் விளக்கினர். அப்போது விஜயபாஸ்கர் பேசும் போது, "மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கும், சுகாதாரத்துறைக்கும் பெருமை சேர்க்கும் வி‌ஷயமாகும்.

எய்ம்ஸ் தமிழகத்தில் அமைக்கப்பட வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார். அவரது கனவை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி உள்ளார். மருத்துவமனை அமைக்க மத்திய அரசு விதித்துள்ள குடிநீர், மின்சாரம், ஐ.ஓ.சி. பைப் லைன் உள்பட 5 நிபந்தனைகள் குறித்து 2 நாட்களில் ஆய்வு கூட்டம் நடத்தி நிவர்த்தி செய்யப்படும்.

இதுதொடர்பான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மருத்துவமனைக்கு தேவையான 200 ஏக்கர் நிலம் தயாராக உள்ளது. மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP