Logo

ஐ.எஸ்.எல். லீக் கால்பந்துக்கான சென்னை அணியின் சீருடை அறிமுகம்!!

ஐ.எஸ்.எல். லீக் கால்பந்து தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியின் சீருடை கோவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
 | 

ஐ.எஸ்.எல். லீக் கால்பந்துக்கான சென்னை அணியின் சீருடை அறிமுகம்!!

ஐ.எஸ்.எல். லீக் கால்பந்து தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியின் சீருடை கோவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டிகள் வரும் 1ஆம் தேதி துவங்க உள்ளது. மார்ச் மாதம் இறுதி வரை நடைபெற உள்ள இதில் மணிப்பூர், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.

இந்நிலையில் சென்னை சிட்டி எஃப்சி அணியின் சீருடை அறிமுக நிகழ்ச்சி இன்று கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. சீருடைகளை அணியின் தலைமை ஆலோசகர் விஜயராகவன் மற்றும் தலைமை பயிற்சியாளர் அக்பர் நவாஸ் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.

இதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை சிட்டி எஃப்சி அணியின் உரிமையாளர் ரோஹித் ரமேஷ், சென்னை சிட்டி எஃப்சி அணியில் 10க்கும் மேற்பட்ட தமிழக வீரர்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளதாகவும், தற்போது அணியில் கூடுதலாக வெளிநாட்டை சேர்ந்த கட்சுமி மற்றும் அடால்ஃபோ ஆகிய இரு வீர்ர்களை சேர்த்துள்ளதாக கூறினார்.

மேலும், இதற்கான 10 ஆட்டங்கள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக கூறிய அவர், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பார்வையாளர்களை அதிகம் எதிர்பார்ப்பதாகவும், நேரலை ஒளிபரப்பாக டி.டி ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், உதவி பயிற்சியாளர் சத்யா டகோரா,அணி ஒருங்கிணைப்பாளர் இன்குலாப் உட்பட அணி வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP