அதிமுக பலம் பொருந்திய கட்சி: முதலமைச்சர்

அதிமுக பலம் பொருந்திய கட்சியாக இருக்கிறது என்றும் அதிமுகவில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 | 

அதிமுக பலம் பொருந்திய கட்சி: முதலமைச்சர்

அதிமுக பலம் பொருந்திய கட்சியாக இருக்கிறது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மக்களை வழிநடத்த ஒரே தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியுள்ளது தொடர்பாக சேலம் எடப்பாடியில் முதலமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், ராஜன் செல்லப்பா பேட்டியை பார்த்த பிறகே கருத்து கூறமுடியும் என்றும் அதிமுக பலம் பொருந்திய கட்சியாக இருக்கிறது, அதிமுகவில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை என கூறினார்.

மேலும், தொண்டர்களால் ஆளக்கூடிய ஒரே கட்சி அதிமுக என்றும், அதில் எல்லாருமே தலைவர்கள் தான் எனவும் கூறினார். உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும் அதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறிய முதலமைச்சர், அமமுகவில் இருந்தவர்கள் படிப்படியாக அதிமுகவில் இணைந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். 

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் திமுகவினர் அரசு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும், குற்றம் சாட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாலம் திறப்பு விழாவில் திமுகவினர் கலந்து கொண்டதாகவும் கூறிய முதலமைச்சர் பழனிசாமி, மக்கள் பாதிக்காத அளவுக்கு சேவையும், வசதியும் செய்து தர வேண்டும் என்பதே அரசின் எண்ணம் என தெரிவித்தார். 

newstm.in     

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP