வேலூர் தேர்தலை நடத்தக்கோரி நீதிமன்றத்தை நாடிய அதிமுக!

பணப்பட்டுவாடா காரணாமாக, வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்ததையடுத்து, தற்போது தேர்தலை நடத்தக்கோரி அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
 | 

வேலூர் தேர்தலை நடத்தக்கோரி நீதிமன்றத்தை நாடிய அதிமுக!

பணப்பட்டுவாடா காரணாமாக, வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்ததையடுத்து, தற்போது தேர்தலை நடத்தக்கோரி அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு, திமுக பொருளாளர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகனின் உதவியாளருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூரில் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் ரூ.11.53 கோடியும், துரைமுருகன் வீட்டில் ரூ.10 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. 

தொடர்ந்து, வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, தேர்தல் செலவின உதவியாளர் புகார் அளித்து, அதன்படி வழக்கும் அவர்மீது பதியப்பட்டுள்ளது. 

இதையடுத்து, வேலூரில் கட்டுகாட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதால், அங்கு தேர்தலை ரத்து செய்வதற்கான பரிந்துரையை தேர்தல் ஆணையம் குடியரசுத்தலைவருக்கு அனுப்ப, அவரும் நேற்று ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, வேலூர் தொகுதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இதனை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதையோடு, இன்று காலை 10.30 மணிக்கு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP