மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
 | 

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான் மற்றும் மேட்டூர் நகர செயலர் என்.சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்வரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி இணைந்து வெளியிட்டுள்ளனர். 

அதிமுகவுக்கு மாநிலங்களவையில் 3 இடங்கள் உள்ள நிலையில், முன்னதாக மக்களவைத் தேர்தலின் போது போடப்பட்ட ஒப்பந்தப்படி, ஒரு இடம் பா.ம.கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP