ஆசிட் ஊற்றுவதாக மிரட்டுகிறார்! பிரபல நடிகையின் பகீர் குற்றச்சாட்டு!

பேரன்பு படத்தில் நடிகர் மம்முட்டியோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் திருநங்கை அஞ்சலி அமீர். இவரது வாழ்க்கை வரலாறு மலையாள மொழியில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.
 | 

ஆசிட் ஊற்றுவதாக மிரட்டுகிறார்! பிரபல நடிகையின் பகீர் குற்றச்சாட்டு!

பேரன்பு படத்தில் நடிகர் மம்முட்டியோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் திருநங்கை அஞ்சலி அமீர். இவர் முதல் திருநங்கை நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வாழ்க்கை வரலாறு மலையாள மொழியில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அஞ்சலி அமீர், முகநூல் நேரலையில், எனது காதலர் என் உணர்வுகளை மதிப்பதில்லை, நண்பர்களிடம் கூட பேச அனுமதிப்பதில்லை. மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடும் தொந்தரவு செய்கிறார். அவரை பிரிந்து சென்றால் ஆசிட் ஊற்றிவிடுவேன் என கண்ணீர் மல்க கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. 

இந்நிலையில், அவரது காதலர் அனஸ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரை மிரட்டவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த 2 வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும், அவருக்கு யாரும் ஆதரவளிக்கவில்லை என்பதால் தான் உதவியாகத்தான் இருந்தாகவும் தெரிவித்துள்ள அவர், அஞ்சலி அமீரின் நண்பர்கள் அவருக்குத் தவறான ஆலோசனைகளைச் சொல்வதாகவும், அஞ்சலிக்கு விருப்பமில்லை என்றால் விலகிக்கொள்ளட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP