அதிமுக - பாஜக கூட்டணி ஒரு கட்டாய கல்யாணம்: புதுவை முதல்வர் விமர்சனம்!

அதிமுக அரசை தன் கைக்குள் கொண்டுவர கூட்டணி என்ற பெயரில் கட்டாயக் கல்யாணம் செய்திருப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
 | 

அதிமுக - பாஜக கூட்டணி ஒரு கட்டாய கல்யாணம்: புதுவை முதல்வர் விமர்சனம்!

அதிமுக அரசை பாஜக தன் கைக்குள் கொண்டுவர, கூட்டணி என்ற பெயரில் கட்டாயக் கல்யாணம் செய்திருப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக அரசு விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செய்யவில்லை என தெரிவித்தார்.

தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள கூட்டணி நிர்ப்பந்திக்கப்பட்ட கூட்டணி என்றும், பாஜக, அதிமுக அரசை தன் கைக்குள் கொண்டு வருவதற்காக கட்டாயக் கல்யாணம் செய்திருப்பதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், தேர்தல் வரும்போது தான் தமிழகம் பற்றி பிரதமர் மோடிக்கு ஞாபகம் வருகிறது என நாராயணசாமி தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP