மனைவியைக் காதலிச்சதுக்காக தர்ம அடிக் கொடுக்கும் வினோத கிராமம்!!

பீகாரில் இளம் தம்பதியினர் ஒருவரையொருவர் காதலித்ததற்காக கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

மனைவியைக் காதலிச்சதுக்காக தர்ம அடிக் கொடுக்கும் வினோத கிராமம்!!

பீகாரில் இளம் ஜோடிகள் ஒருவரையொருவர் காதலித்ததற்காக கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் ஒரு இளம் ஜோடிகள் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர். இந்நிலையில், சம்பிரதாயப்படி இருவரை பிரித்து வைத்திருந்த நிலையில், அந்த பெண் தனது காதல் கணவரை ரகசியமாக சந்திக்க அழைத்ததாக கூறப்படுகிறது. காதலியை சந்திப்பதற்காக வந்த நிலையில், கிராமவாசிகள் இருவரையும் கையும், களவுமாக பிடித்து பஞ்சாயத்தில் நிறுத்தியுள்ளனர். 

பஞ்சாயத்து உறுப்பினர்கள் அவர்கள் இருவரையும், கரும்பு, கட்டையால் இரக்கமின்றி அடித்து தண்டனை வழங்கினர். தம்பதியினரை தாக்கிய இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சர்பஞ்ச், சம்பனகர் கிராமத்தில் வசிக்கும் மகேந்திர சர்தார் தலைமறைவாகியதாக கூறப்படுகிறது. 

இந்த தம்பதியினர் மனிதாபிமானமற்ற முறையில் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதைக் காட்டும் வீடியோ கிளிப் வைரலாகி உள்ளது .இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பின்னர் குற்றம் சாட்டப்பட்ட சர்பஞ்ச், சம்பனகர் கிராமத்தில் வசிக்கும் மகேந்திர சர்தார் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் ஒரு தம்பதியினர் இப்படி காதல் திருமணம் செய்ததற்காக காதுகளைப் பிடித்துக் கொண்டு கிராமப்புற பஞ்சாயத்து கூட்டத்தில் திறந்த மைதானத்தில் தங்கள் எச்சிலை நக்கவைத்து தண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP