Logo

2020 ஆம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை !! முழு லிஸ்ட் உள்ளே

2020 ஆம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை !! முழு லிஸ்ட் உள்ளே
 | 

2020 ஆம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை !! முழு லிஸ்ட் உள்ளே

2020ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல். அதில், மொத்தம் 23 நாட்களுக்கு பொது விடுமுறை.இதில்  ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் தலா 5 நாட்களும், அக்டோபா் மாதத்தில் 4 நாட்களும், ஏப்ரல் மாதத்தில் 3 நாட்களும் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர குடியரசுத் தினம், மொஹரம் பண்டிகை உள்ளிட்ட நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. நவம்பர் 14ம் தேதி அன்று, குழந்தைகள் தின விழா நாளில், தீபாவளி வருவதால் இரண்டிற்கும் சேர்த்து, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் எந்த ஒரு விடுமுறை தினமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜனவரி 1-ஆங்கிலப் புத்தாண்டு, 
ஜனவரி 15-பொங்கல், 
ஜனவரி 16-திருவள்ளூவர் தினம்,
ஜனவரி 17-உழவர் திருநாள்,
ஜனவரி 26- குடியரசுத் தினம்,
மார்ச் 25- தெலுங்கு வருடப் பிறப்பு,
ஏப்ரல் 1- வணிக, கூட்டுறவு வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு. 
ஏப்ரல் 6- மஹாவீர் ஜெயந்தி,
ஏப்ரல் 10- புனித வெள்ளி,
ஏப்ரல் 14- தமிழ்ப்புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்,
மே 1- மே தினம்,
மே 25- ரம்ஜான்,
ஆகஸ்ட் 1- பக்ரீத்,
ஆகஸ்ட் 11- கிருஷ்ண ஜெயந்தி,
ஆகஸ்ட் 15- சுதந்திர தினம்,
ஆகஸ்ட் 22- விநாயகர் சதுர்த்தி,
ஆகஸ்ட் 30- மொகரம்,
அக்டோபர் 2- காந்தி ஜெயந்தி,
அக்டோபர் 25- ஆயுதபூஜை,
அக்டோபர் 26- விஜயதசமி,
அக்டோபர் 30- மிலாது நபி,
நவம்பர் 14- தீபாவளி, 
டிசம்பர் 25- கிறிஸ்துமஸ் என மொத்தம் 23 நாட்களுக்கு பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 


விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து அலுவலகங்களும் மூடப்பட வேண்டும் அறிவுறுத்திய தமிழக அரசு, விடுமுறை நாட்கள் மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP