சினிமா பாணியில் துரத்திய காவல்துறை.. நடுக்கடலில் குதித்து தப்பிய கஞ்சா கடத்தல் கும்பல்!

சினிமா பாணியில் துரத்திய காவல்துறை.. நடுக்கடலில் குதித்து தப்பிய கஞ்சா கடத்தல் கும்பல்!
 | 

சினிமா பாணியில் துரத்திய காவல்துறை.. நடுக்கடலில் குதித்து தப்பிய கஞ்சா கடத்தல் கும்பல்!

ராமநாதபுரம் கடல் வழியாக கடத்தல் சம்பவங்களைத் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து 24 மணி நேரம் ரோந்து பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தகவல் அடிப்படையில் பாம்பன் தெற்கு கடற்கரையில் இருந்து தனிப் படகு மூலம் பாம்பன் அருகே உள்ள தீவுகளில் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த ஒரு நாட்டுபடகை நோக்கிச் சென்றபோது அவர்கள் தங்கள் கையில் இருந்த ஒரு மூட்டையை கடலில் வீசிவிட்டு சென்றுள்ளனர். சினிமா பாணியில் துரத்திய காவல்துறை.. நடுக்கடலில் குதித்து தப்பிய கஞ்சா கடத்தல் கும்பல்!

அந்த மூட்டையை எடுத்து சோதனை செய்தபோது அந்த மூட்டையில் ஆறு பாக்கெட்களில் சுமார் 12 கிலோ கஞ்சா மற்றும் ஜி.பி.எஸ் (திசைகாட்டும் கருவி) இருந்தது தெரியவந்தது. மேலும், தப்பிச் சென்றவர்களை பிடிப்பதற்காக அவர்களை விரட்டி சென்ற போது கடத்தல்காரர்கள் மூன்று பேர் படகிலிருந்து கடலில் குதித்து மாயமாகினர். இதனையடைத்து நாட்டு படகையும், கஞ்சாவையும் பாம்பன் தெற்கு வாடி கடற்கரைக்கு எடுத்து வந்து பாம்பன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த பரிமாற்றத்திற்காக இலங்கையில் இருந்து யாரேனும் வருகிறார்களா அல்லது இந்தப் பகுதிகளில் வேறு இடங்களில் கடத்தல்காரர்கள் மறைந்து உள்ளனரா என்பது குறித்து தீவிரமாக தேடி வருகிறோம். கடத்தல் சம்பவங்களை தடுக்க முழு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP