குழந்தையின் பசிக்குரலை கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்... நெகிழவைத்த பாசம்

கோமாவில் இருந்த பெண் தன் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி விட்டு மீண்டும் கோமாவிற்கு சென்ற அதிசய சம்பவம் அரங்கேறியுள்ளது.
 | 

குழந்தையின் பசிக்குரலை கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்... நெகிழவைத்த பாசம்

கோமாவில் இருந்த பெண் தன் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி விட்டு மீண்டும் கோமாவிற்கு சென்ற அதிசய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

வடக்கு அர்ஜென்டீனா மாகாணம், சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வரும் பெண் மரியா லாரா பெர்ராரோ (42). இவருக்கு மார்ட்டின் என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் மரியா லாரா இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் அவரின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் சுயநினைவை இழந்தார். கோமாவிற்கு சென்ற மரியா லாராவின் மூளை இறப்புக்கு ஆளாக நேரிடும் எனவே, அவரது உறுப்புக்களை தானம் செய்யும்படி மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். 

ஆனால், மரியா பூரண குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கையில் அவரது கணவர் மார்ட்டின் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து சிகிச்சையளிக்கும் படி மருத்துவரிடம் கேட்டுகொண்டுள்ளனர். அதன்படி மருத்துவமனையில் வைத்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மரியாவின் இளைய மகள் அம்மாவை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். 2வயதான குழந்தை வழக்கம் போல் தனது தாயை கட்டிபிடித்துக்கொண்டு பசிக்குது அம்மா என கூறியுள்ளார். 

குழந்தையின் பசிக்குரலை கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்... நெகிழவைத்த பாசம்

குழந்தையின் பசிக் குரலை கேட்டதுமே, 30 நாள் சுயநினைவு இழந்து கோமாவில் இருந்த மரியா, டக்கென கண் விழித்து குழந்தையை வாரியணைத்து தாய்ப்பால் கொடுத்தார். இதை ஒரு சகஜ நிகழ்வாகவே மரியா வெளிப்படுத்தினார்.. இதை பார்த்ததுமே அங்கிருந்த மருத்துவர்கள், குடும்பத்தினர் ஆச்சரியத்தில் உறைந்துவிட்டனர்.  அவர்களை அறியாமல் சந்தோஷத்தில் கண்ணீர் விட்டனர். ஆனால் மரியா மீண்டும் கோமாவிற்கு சென்றுவிட்டார்.

இருப்பினும், இதுவரை எவ்வித அசைவும் இல்லாமல் இருந்த மரியா எழுந்து இயல்பாக நடந்துகொண்டது, குணமடைவதற்கான ஒரு நல்ல அறிகுறி என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கோமாவில் இருந்த போதும் குழந்தையின் பசியாற்றிய தாயின் அன்பு இன்று உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP