சென்னையில் பரபரப்பு....காதலனை ஆள் வைத்து அடித்த காதலி

சென்னையில் காதலனை பழி வாங்க, அவரை ஆள் வைத்துக் கடத்தி தாக்கிய பட்டதாரி பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 | 

சென்னையில் பரபரப்பு....காதலனை ஆள் வைத்து அடித்த காதலி

சென்னையில் காதலனை பழி வாங்க, அவரை ஆள் வைத்துக் கடத்தி தாக்கிய பட்டதாரி பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நவீத் அகமது. இவருக்கு அமெரிக்காவில் வசிக்கும் இளம்பெண்ணுடன் வலைதளம் மூலம் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், காதலன் நவீத் அகமதுவுடன், இளம்பெண்ணுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், காதலனை பழி வாங்க, அவரை ஆள் வைத்துக் கடத்தி தாக்க அந்த இளம்பெண் திட்டமிட்டுள்ளார். 

இதையடுத்து, 3 பேர் கொண்ட கும்பல் நவீத் அகமதை கடத்தி அடித்து உதைத்து ஜாபர்கான் பேட்டையில் உள்ள முட்புதரில் வீசிச் சென்றனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட நவீத் அகமது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நவீத்தை கடத்தித் தாக்கிய 3 பேரில் பாஸ்கர் என்பவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தப்பியோடி தலைமறைவாக உள்ள ஏனையோரை போலீசார் தேடி வருகின்றனர்.
 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP