தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய விவசாயி

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பிரதமர் மோடிக்கு விவசாயி ஒருவர் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்.தினமும் அவரது சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தி வருகிறார்.
 | 

தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய விவசாயி

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பிரதமர் மோடிக்கு விவசாயி ஒருவர் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 50). சிறுவயது முதலே பிரதமர் மோடியின் தீவிர ரசிகரான இவர் தனது சொந்த செலவில் மோடிக்கு கோவில் கட்டி சிலை வைத்து வழிபட வேண்டும் என விரும்பினார்.. இந்நிலையில் துறையூரை அடுத்த எரகுடியில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் மோடிக்கு கோவில் கட்டி சிலை அமைத்துள்ளார். தினமும் அவரது சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தி வருகிறார். பா.ஜனதாவின் தொண்டராகவும், எரகுடி விவசாய சங்க தலைவராகவும் உள்ள சங்கர், எந்தவித எதிர்பார்ப்பும், யாருடைய உதவியும் இன்றி தனது சொந்த செலவில் கோவில் கட்டினார்.

 

விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் கோவில் கட்ட முடியவில்லை என்றார். தற்போது, விவசாயத்தில் கிடைத்த ஓரளவு பணத்தை கொண்டு, கோவில் கட்டும் பணியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கினேன். தற்போது, கோவில் கட்டி முடித்துவிட்டேன். கட்சியின் மூத்த தலைவர்களை கொண்டு விரைவில் கும்பாபிஷேகம் செய்ய விரும்புகிறேன் என அவர் கூறினார்.  பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர் ஆவார். அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்த கோவிலை கட்டி இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP