Logo

பிளஸ் 2 பொதுத் தேர்வில்  91.3 % பேர் தேர்ச்சி ! 

தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொத்தம் 91.3 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகமாக உள்ளது.
 | 

பிளஸ் 2 பொதுத் தேர்வில்  91.3 % பேர் தேர்ச்சி ! 

தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2  பொதுத் தேர்வில் மொத்தம் 91.3 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகமாக உள்ளது.  

2018-19 கல்வியாண்டு பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 1 -ஆம் தேதி தொடங்கி மார்ச் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7, 082 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வை எழுதினர். 

இதில்,  இதில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 6 மாணவிகள், 4 லட்சத்து ஆயிரத்து 101 மாணவர்கள், 2 திருநங்கையர்கள், 45 சிறை கைதிகள் மற் றும் 26 ஆயிரத்து 885 தனித்தேர் வா்கள் அடங்குவர். பொதுத்தேர்வுக்காக மொத்தம் 2,941 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணியளவில் வெளியிடப்பட்டன.

இதில், தமிழகத்தில் மொத்தம் 91.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 88.57%, மாணவியர் 93.64%. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 95.37% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP