ஓராண்டிற்குள் 820 மின்சார பேருந்துகள்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழகம் முழுவதும் ஓராண்டிற்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 | 

ஓராண்டிற்குள் 820 மின்சார பேருந்துகள்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழகம் முழுவதும் ஓராண்டிற்குள் 820  மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'மின்சார பேருந்துக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளதாகவும், அனைத்து மாநகரங்களிலும் மேலும் 520 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் ஓராண்டிற்குள் 820  மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என கூறினார். 

போக்குவரத்து துறையில் ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன் ரூ.1,097 கோடியை இந்த வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போக்குவரத்து விதிமீறல் தொடர்பான அபராதம் குறைப்பு குறித்து முதல்வர் விரைவில் அரசாணை வெளியிடுவார் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP