Logo

8 மாசம் வெளுக்கப் போகும் வெயில்! வெளியான பகீர் ரிப்போர்ட்!

உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதல் தொடர்ந்து வந்தால் கோடைகாலம் 8 மாதங்கள் வரை நீடிக்கும் என்ற அதிர்ச்சிகரமான ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.
 | 

8 மாசம் வெளுக்கப் போகும் வெயில்! வெளியான பகீர் ரிப்போர்ட்!

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் வெளியிடப்படும் பசுமை இல்லா வாயுக்களாலும், மரங்களை வெட்டுதல், காட்டுத்தீ  போன்ற தொடர் சங்கிலி நிகழ்வுகளாலும் பூமி பல்வேறு பருவமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக புவி வெப்பமாதல் உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் கடல் நீர்மட்டம் உயர்ந்து பல தீவுகள் மூழ்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

8 மாசம் வெளுக்கப் போகும் வெயில்! வெளியான பகீர் ரிப்போர்ட்!

இந்நிலையில், ஆராய்ச்சியாளர்கள் புதிதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.  பூமி வெப்பமடைவது மட்டுமல்லாமல் ஈரப்பதமும் அதிகரித்து வருகிறது. வெப்பம் மற்றும் ஈரப்பதம் கலந்த நிலை ”ஈரக்குமிழ் வெப்பநிலை” எனப்படுகிறது. இந்த ஈரக்குமிழ் வெப்பநிலை இந்தியாவை பொறுத்தவரை 31 டிகிரி செல்சியஸாக உள்ளது. ஆண்டுதோறும் அதிகரித்து வரும் இந்த வெப்பநிலையை பொறுத்தே கோடைக்காலங்கள் அமைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மாசம் வெளுக்கப் போகும் வெயில்! வெளியான பகீர் ரிப்போர்ட்!

இந்த வெப்பநிலையை கணக்கிடுகையில் 2070க்குள் இந்தியாவில் கோடைகாலம் என்பது 8 மாதங்களாக மாற்றம் பெற வாய்ப்பிருப்பதாக ஆய்வியல் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. பொதுவாக இந்தியாவில் மார்ச் மாதம் பாதியில் தொடங்கும் கோடைகாலம் ஜூன், ஜூலை வரை நீடிக்கிறது. 

8 மாசம் வெளுக்கப் போகும் வெயில்! வெளியான பகீர் ரிப்போர்ட்!

இந்த 4 மாத கோடை காலத்திற்குள்ளேயே தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், 8 மாதங்கள் கோடை காலமாக இருந்தால் தண்ணீர் பிரச்சினை முதற்கொண்டு, உணவு பஞ்சம் வரை பல பிரச்சினைகளை இந்தியா சந்திக்க வேண்டி வரலாம் என கூறப்படுகிறது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP