காலை 6-7, இரவு 7-8 மணி: இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தீபாவளி பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
 | 

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின் போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், ‘தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம், புனித தலங்கள், குடிசை பகுதிகளில் பட்டாசு வெடிக்கக்கூடாது. அதிக ஒலி எழுப்பும் தொடர்ந்து வெடிக்கும் சரவெடிகளை தவிர்க்க வேண்டும்’ என்று மாசு கட்டுப்பாடு வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. மாசு இல்லா தீபாவளியை கொண்டாட ஏதுவாக வெடிவெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP