நாமக்கல்: காட்டாற்று வெள்ளத்தால் 500 ஏக்கர் பயிர்கள் சேதம்

நாமக்கல், ராசிபுரம் அருகே காட்டாற்று வெள்ளம் புகுந்ததில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.
 | 

நாமக்கல்: காட்டாற்று வெள்ளத்தால் 500 ஏக்கர் பயிர்கள் சேதம்

நாமக்கல், ராசிபுரம் அருகே காட்டாற்று வெள்ளம் புகுந்ததில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இந்நிலையில் கனமழை காரணமாக உருவான காட்டாற்று வெள்ளம் புதுப்பட்டி, வடுகம் பகுதிகளில் புகுந்தது. இங்கு 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி, சேனை, சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டது. 

மேலும், புதுப்பட்டி அருகே தரைப்பாலமும் உடையும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தரைப்பாலம் உடையாமல் தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP