சென்னை, நெல்லையில் 49 கோடி ரூபாய் பணம்; 970 கிலோ தங்கம் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வருமான வரித்துறையினர் சென்னை மற்றும் நெல்லை ஆகிய 2 இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். நேற்று(வியாழக்கிழமை) சிவகங்கையில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதுவரை வருமான வரி சோதனையில் மட்டும் 49 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 | 

சென்னை, நெல்லையில் 49 கோடி ரூபாய் பணம்; 970 கிலோ தங்கம் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை மற்றும் நெல்லையில் வருமான வரி சோதனையில் மட்டும் 49 கோடி ரூபாய் பணம், 970 கிலோ தங்கம் மற்றும் 600 கிலோ வெள்ளி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

இன்று அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, "வருமான வரித்துறையினர் சென்னை மற்றும்  நெல்லை ஆகிய 2 இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். நேற்று(வியாழக்கிழமை) சிவகங்கையில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதுவரை வருமான வரி சோதனையில் மட்டும் 49 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்கள் இல்லாமல், 128 கோடியே 32 லட்சம் பறிமுதல் செய்யப்படுள்ளது. இதே போல 284 கோடி மதிப்பிலான 970 கிலோ தங்கம் மற்றும் 600 கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டுள்ளது. 34 லட்சம் மதிப்பிலான மதுபானங்களில் பிராந்தி மற்றும் ரம் 951 லிட்டரும், பியர் 410 லிட்டர் மற்றும் 17,675 லிட்டர் எரிசாயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக 4282 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். 

சென்னை, நெல்லையில் 49 கோடி ரூபாய் பணம்; 970 கிலோ தங்கம் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக டிஜிபியுடன் ஆலோசித்துள்ளதாகவும் அவர் கூறினார். 

தேர்தலையொட்டி, வருகிற 16,17,18ம் தேதிகளிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23 ம் தேதியும், மதுபான கடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும்  ஆலைகளில் மதுபான  உற்பத்தி, விற்பனை மற்றும் மது வகைகள் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார். 

தொடர்ந்து, நாளை (சனிக்கிழமை)  மாலை 6 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்  மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த கூட்டத்தில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை கையாளுவது, துணை ராணுவ மற்றும் போலீஸ் பாதுகாப்பு குறித்து  ஆலோசிக்கவுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP