ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை: 4,500 பிறப்புச் சான்றிதழ்கள் ஆய்வு செய்ய குழு அமைப்பு!

ராசிபுரத்தில் பிறந்த குழந்தைகளை லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்பனை செய்த விவகாரத்தில், ராசிபுரம் நகராட்சியில் உள்ள சுமார் 4,500 பிறப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
 | 

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை: 4,500 பிறப்புச் சான்றிதழ்கள் ஆய்வு செய்ய குழு அமைப்பு!

ராசிபுரத்தில் பிறந்த குழந்தைகளை லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்பனை செய்த விவகாரத்தில், ராசிபுரம் நகராட்சியில் உள்ள சுமார் 4,500 பிறப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. 

ராசிபுரத்தைச் சேர்ந்த நர்ஸ் அமுதா மற்றும் அவரது கணவர் நகராட்சி ஊழியராக பணிபுரியும் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்றுள்ளனர். நகராட்சி அதிகாரி ஒருவருடன் நர்ஸ் அமுதா செல்போனில் பேசிய ஆடியோ இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆண் குழந்தைகள் என்றால் மூன்று லட்சம் முதல் மூன்றரை லட்சம் வரையிலும், ஆரோக்கியமாகவும் சிவப்பாகவும் உள்ள ஆண் குழந்தைகளுக்கு நான்கு லட்சம் வரையிலும்,  அதே போன்று பெண் குழந்தைகள் என்றால், இரண்டரை லட்சம் முதல் 3 லட்சம் வரையிலும் பணம் பெற்று விற்றுள்ளார்.

ராசிபுரம் நகராட்சியில் இருந்து குழந்தைக்கான பிறப்பு சான்றிதழை ஆன்லைனில் இருந்து பெற்றுத் தருவதாகவும் கூறி அதற்காக தனியாக 70 ஆயிரம் ரூபாய் வாங்கியிருக்கிறார்.

இதையடுத்து, நர்ஸ் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராசிபுரம் நகராட்சியில் உள்ள சுமார் 4,000 பிறப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர கொல்லிமலையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவரிடம் இரண்டு பெண் குழந்தைகளை வாங்கி, அந்த குழந்தைகளை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்பனை செய்துள்ளார். அந்த குழந்தைகள் தத்துக் கொடுக்கப்பட்ட ஆவணங்களையும் சரிபார்க்க தலா 5 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP