45 மணி நேரத்தை கடந்த மீட்பு பணி!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 45 மணி நேரங்களை கடந்து நீடித்து வருகிறது.
 | 

45 மணி நேரத்தை கடந்த மீட்பு பணி!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 45 மணி நேரங்களை கடந்து நீடித்து வருகிறது. 

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது, குழந்தை இருக்கும் இடத்தில் இருந்து 2 மீட்டர் தொலைவில் 90அடி ஆழத்திற்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 90 அடி ஆழம் கிணறு அமைக்கப்பட்ட பிறகு இருஆழ்துளை கிணறையும் இணைக்கும் வகையில் பக்கவாட்டில் சுரங்கம் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாறைகள் அதிகம் இருப்பதால் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி கோபிநாத் தலைமையில் 8 மருத்துவர்கள் அடங்கிய குழுவும், திருச்சி அரசு மருத்துவமனை டீன் ம் அர்ஷிதா பேகம் தலைமையில் 4 மருத்துவர்கள்குழுவும் தயாராக உள்ளது. இந்த குழுவில் குழந்தைகள் நல மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர் பொது மருத்துவர்கள், மெடிக்கல் சூப்பிரண்டு, மயக்கமருந்து நிபுணர் இடம் பெற்றுள்ளனர். 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP