4 பேரும் என்கவுண்டர் செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது! நிர்பயாவின் தாயார் கருத்து!

மருத்துவ மாணவி கற்பழித்துக் கொலை வழக்கு! 4 பேரும் என்கவுண்டர் செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது! நிர்பயாவின் தாயார் கருத்து!
 | 

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான  பிரியங்கா ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மது போதையிலிருந்த நான்கு பேர் திட்டமிட்டு கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து, கொன்றதுடன், பெட்ரோல் ஊற்றி எரித்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.

இன்று அதிகாலை பிரியங்கா ரெட்டியை எரித்த அதே இடத்தில், சம்பவம் நடந்தது எப்படி என்று நடித்துக் காட்டுவதற்காக போலீசார், நால்வரையும் அழைத்துச் சென்ற போது, அவர்கள் தப்பிக்க முயன்றதாக கூறி நான்கு பேரையும் என்கவுண்டர் செய்து போலீசார் சுட்டுக் கொன்றனர். 

4 பேரும் என்கவுண்டர் செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது! நிர்பயாவின் தாயார் கருத்து!

இந்நிலையில், பிரியங்கா ரெட்டியின் கற்பழித்துக் கொலை வழக்கில், 4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயார் கருத்து தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் 4 பேரையும் என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நிர்பயாவின் தாய் வலியுறுத்தியுள்ளார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP