4 தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று தொடக்கம்!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 4 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை இன்று தொடங்குகிறது.
 | 

4 தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று தொடக்கம்!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 4 தொகுதி சட்டப்பேரவை  இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில்  மே 19ம் தேதி இறுதி கட்ட மக்களவைத் தேர்தலுடன் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குபதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கி நேற்று (ஏப்.29) நிறைவடைந்தது. சூலூரில் (ஆண்கள்-42, பெண்-1) 43 பேரும், அரவக்குறிச்சியில் (ஆண்கள்-71, பெண்கள்-4) 75 பேரும், திருப்பரங்குன்றத்தில் (ஆண்கள்-58, பெண்கள்-4, திருநங்கை-1) 63 பேரும், ஒட்டப்பிடாரம் (ஆண்கள் -35, பெண்கள் -3) 38 பேரும் என மொத்தம் 219 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்த வேட்பு மனுக்களுக்கான பரிசீலனை இன்று  தொடங்கி மே 2ம் தேதி வரை நடைபெறுகிறது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னங்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 2ம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP