Logo

பாலாற்றில் 4 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக தலைமைச் செயலாளர்

பாலாற்றில் புதிதாக 4 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது என தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கண்ணன்கோட்டை நீர்த்தேக்கப்பணிகள் மார்ச் மாதம் நிறைவடையும் எனவும் தகவல்
 | 

பாலாற்றில் 4 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக தலைமைச் செயலாளர்

பாலாற்றில் புதிதாக 4 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது என தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டையில் அமைக்கப்பட்டு வரும் நீர்தேக்க பணிகளை  தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கண்ணன்கோட்டை நீர்த்தேக்கப்பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் மார்ச் மாதத்தில் பணிகள் முழுமையாக  நிறைவடையும் எனவும் தெரிவித்தார். நீர்தேக்கப்பணி நிறைவடைந்த பின்பு சென்னைக்கு தினமும் கூடுதலாகக் குடிநீர் கிடைக்கும் என்றும், கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு குழாய் பதிக்கும் பணி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். பாலாற்றில் 4 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளதாக குறிப்பிட்ட அவர்,  தமிழகத்தில் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குடிமராமத்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP